குழந்தை பெற்றெடுத்த 17 வயது சிறுமி தலைமறைவான வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு


குழந்தை பெற்றெடுத்த 17 வயது சிறுமி தலைமறைவான வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Sept 2021 1:02 AM IST (Updated: 23 Sept 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

தலைமறைவான வாலிபருக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கீரனூர் அருகே களமாவூர் பகுதியை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் தனிமையில் சந்தித்து பழகியதில் மாணவி கர்ப்பமாகி கடந்த 15-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சசி, கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மகாராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மகாராஜன் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து தலைமறைவான மகாராஜனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story