புதுக்கோட்டையில் 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை ரூ.15 ஆயிரம் திருட்டு


புதுக்கோட்டையில் 3 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை ரூ.15 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 23 Sept 2021 1:06 AM IST (Updated: 23 Sept 2021 1:06 AM IST)
t-max-icont-min-icon

3 கடைகளில் ரூ.15 ஆயிரம் திருட்டி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் மருந்தகம் கடை வைத்திருப்பவர் சுரேஷ் (வயது 40). இவரது கடையில் மர்மநபர்கள் புகுந்து ரூ.10 ஆயிரத்தை திருடிச்சென்றனர். இதேபோல அவரது கடையின் பக்கத்து மருந்தக கடையில் ரூ.5 ஆயிரமும், மளிகை கடையில் குளிர்பான பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story