திருச்சியில் 3 ஆயிரத்து 600 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்


திருச்சியில் 3 ஆயிரத்து 600 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்
x
தினத்தந்தி 23 Sept 2021 1:07 AM IST (Updated: 23 Sept 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 3 ஆயிரத்து 600 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்யை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி, செப்.23&
திருச்சியில் 3 ஆயிரத்து 600 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய்யை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரேஷன் மண்எண்ணெய் பதுக்கல்
உணவு கடத்தல் தடுப்புபிரிவு கூடுதல் டி.ஜி.பி.ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் மேற்பார்வையில், திருச்சி மாநகரத்துக்குட்பட்ட சஞ்சீவிநகரில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்&இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள நேருத்தெருவில் அலிபாய் என்பவரின் கடைக்கு முன்புறமுள்ள காலி இடத்தில் டேங்கர் லாரியும், அதன் அருகே சரக்கு வேனும் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த உணவு கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் அங்கு சென்று அந்த வாகனங்களில் சோதனையிட்டனர். இதில் டேங்கர் லாரியிலும், சரக்கு வேனில் இருந்த இரும்பு பேரல்களிலும் மண்எண்ணெய் இருந்தது தெரியவந்தது.
கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2 பேர் கைது
இது தொடர்பாக வாகனங்களின் அருகே நின்று கொண்டு இருந்த பாலக்கரை குட்செட்ரோடு ஆலம்தெருவை சேர்ந்த செல்வராஜ் (வயது 41) , திருச்சி முதலியார்சத்திரம் கெம்ஸ்டவுனை சேர்ந்த மணிகண்டன் (39) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், குறைந்த விலைக்கு கள்ளத்தனமாக ரேஷன் மண்எண்ணெய்யை வாங்கி பதுக்கி வைத்து டேங்கர் லாரியில் எடுத்து வந்து 4 இரும்பு பேரல்களில் நிரப்பி சரக்கு வேனில் ஏற்றி கள்ளச்சந்தையில் விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் மீதும் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். மேலும், டேங்கர் லாரியில் இருந்த 2 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெயையும், சரக்கு வேனில் இரும்பு பேரல்களில் பதுக்கி வைத்து இருந்த 800 லிட்டர் ரேஷன் மண்எண்ணெயையும் மற்றும் டேங்கர் லாரி, சரக்கு வேன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story