ரூ.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்துடன் காரைக்குடி பயணி சிக்கினார்

செம்பட்டு,செப்.23&
திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை 8.30 மணி அளவில் சார்ஜா புறப்பட்டு செல்வதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தயாராக நின்றது. இந்த நிலையில் விமானத்தில் ஏற இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (வயது 43) என்ற பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, ரூ.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், துபாய் திராம்ஸ் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதனை சார்ஜாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் ரூ.80 லட்சம் மதிப்பலான வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story