தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
தர்மபுரி, பென்னாகரம் சாலையில் குமாரசாமிபேட்டை மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையின் இருபகுதியிலும் கடைகள், குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதற்கிடையே இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியை சுகாதாரமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
&வேலவன், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
நாமக்கல் மாவட்டம் சர்கார் நாட்டாமங்கலம் கிராமத்திற்கு உட்பட்ட முத்தனம்பாளையம் 8&வது வார்டில் சாலையின் ஓரமாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அந்த குப்பைகளுக்கு இரவில் மர்மநபர்கள் தீவைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் மூச்சுதிணறல் ஏற்படுகிறது. இதுதவிர குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ந.இந்திரகுமார், முத்தனம்பாளையம், நாமக்கல்.
===
====
வேகத்தடையில் வெள்ளை வர்ணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவியில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் 1 கி.மீ. தொலைவில் அம்பேத்கர் காலனி அருகில் 2 வேகத்தடை உள்ளன. இந்த வேகத்தடைகள் மீதும் வெள்ளை வர்ணம் பூசப்படாததால், அந்த பகுதியில் வேகத்தடை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடை மீது வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&சிங்கார முருகன், கிருஷ்ணகிரி.
===
குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா?
சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தெப்பகுளம், தாரமங்கலம் பஸ் நிலையத்திற்கு அருகில் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகிறது. அப்படி கொட்டப்பட்ட குப்பைகள் ஒரு மாதத்திற்கும் மேலாக அதே இடத்தில் உள்ளது. இதுபோன்று குப்பைகளை பொதுமக்கள் கூடும் இடங்களில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஊர் பொதுமக்கள், தாரமங்கலம்.
===
ஆறுபோல் ஓடும் சாக்கடை
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மெனசி கிராமத்தில் பெருமாள் கோவில் அருகில் சாக்கடைநீர் ஆறு போல் ஓடுகிறது. பலமுறை புகார் செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. நோய் பரவும் சூழ்நிலையும் உள்ளது. இதனை போக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
&ரவீந்திரன், மெனசி, தர்மபுரி.
===
பன்றிகள் தொல்லை
சேலம் சிட்கோ பகுதி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இது அங்கு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது. எனவே பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&சுப்பிரமணியன், புதுரோடு, சேலம்.
===
புதிய வழித்தடத்தில் பஸ் சேவை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 கி.மீ. தூரம் கொண்ட நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோட்டிற்கு வேலகவுண்டம்பட்டி, மாணிக்கம்பாளையம், குமரமங்கலம் வழியாக 7&பி நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருவது பயணிகளிடையே போதிய வரவேற்பினை பெற்றுள்ளது. அதேபோல நாமக்கல்லில் இருந்து இதே 35 கி.மீ. தூரம் கொண்ட கரூருக்கு மோகனூர், வாங்கல் வழியாக புதிய வழித்தடத்தில் நகர பஸ்கள் இயக்கப்பட்டால் அது பெரிய உதவியாக இருக்கும். இது குறித்து போக்குவரத்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
&எம்.ஆர்.லட்சுமி நாராயணன், பெருமாள்கோவில் மேடு, நாமக்கல்.
===
பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி (படம் உண்டு)
சேலம் மாவட்டம் சீரகாபாடி மாரியம்மன் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் பணி தொடங்கப்பட்டு 5 மாதம் ஆகியும் இதுவரை முடிக்காமல் உள்ளது. பணி பாதியில் கிடப்பதால் அதில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே பாதியில் விடப்பட்ட கால்வாய் பணியை முழுவதும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&ஊர்மக்கள், சீரகாபாடி.
===
அரசு பள்ளி அருகில் மதுக்கடை
சேலம் மாவட்டம் மல்லூர் பஸ் நிறுத்தம் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும், தனியார் பள்ளி ஒன்றும் உள்ளது. இங்கு மிக அருகில் டாஸ்மாக் மதுக்கடையும் உள்ளது. பள்ளி மாணவ&மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மதுக்கடையை கடந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டும். மதுப்பிரியர்கள் போதை தலைக்கேறி அரைகுறை ஆடையுடன் ரோட்டில் கிடக்கின்றனர். அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் முகம் சுழித்தபடியே செல்ல வேண்டியதாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதுக்கடையை இடம் மாற்றி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
&ஆசைத்தம்பி, மல்லூர், சேலம்.
===
குடிநீரில் கலக்கும் கழிவுநீர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 27&வது வார்டு பகுதியில் அமைந்துள்ள குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எங்களது புகாரை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டும்.
&கு.ஜான், மேட்டூர் அணை, சேலம்.
===
குண்டும், குழியுமான சாலை
தர்மபுரி ரெயில் நிலையம் செல்லும் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&அம்பிகாமயில், தர்மபுரி.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி& கடம்பூர் இணையும் கெங்கவல்லி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதுடன், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை சீரமைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படும் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.
க.ரவிசங்கர், கெங்கவல்லி.
===
Related Tags :
Next Story