பழைய நகைகளை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி


பழைய நகைகளை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி
x
தினத்தந்தி 23 Sept 2021 1:24 AM IST (Updated: 23 Sept 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

பழைய நகைகளை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி

சேலம், செப்.23-
சேலத்தில் பழைய நகைகளை அதிக விலைக்கு விற்று தருவதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பழைய நகைகள்
சேலம் பள்ளப்பட்டி அருகே உள்ள கோடிப்பள்ளம் மற்றும் அழகாபுரம் பகுதிகளை சேர்ந்த 10&க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளனர். 
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:&
பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் பல்வேறு நகைக்கடைகளில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றினார். இந்த நிலையில் அவர் பழைய நகைகளை கொடுத்தால் அதை அதிக விலைக்கு விற்றுக்கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி 50&க்கும் மேற்பட்டவர்கள் பழைய நகைகளை அவரிடம் கொடுத்தோம். அதன்படி ஒவ்வொருவரும் ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என மொத்தம் ரூ.6 கோடி மதிப்பில் பழைய நகைகளை அவரிடம் கொடுத்தோம். 
நகைகளுக்கு உரிய பணம்
பின்னர் அவரிடம் நகைகளுக்கு உரிய பணம் கேட்ட போது பழைய நகைகளை மாற்றவில்லை என்று பல முறை பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் தொடர்ந்து பணம் கேட்ட போது அவர் கொடுக்க முடியாது என்று கூறினார். அப்போது தான் அவர்  பழைய நகைகளை வாங்கிக்கொண்டு எங்களை மோசடி செய்தது தெரிந்தது. இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளோம்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு அவர் வசித்த வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. எனவே பழைய நகைகளை அதிக விலைக்கு விற்றுக்கொடுப்பதாக கூறி ரூ.6 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
==

Related Tags :
Next Story