மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
குலசேகரம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
குலசேகரம் மங்கலம் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45), தொழிலாளி. இவருக்கு ரெஜிமோள்(40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நாகராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை அவருடைய மனைவி ரெஜிமோள் கண்டித்து வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் நாகராஜ் தகராறு செய்தார். அவரை மீண்டும் ரெஜிமோள் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த நாகராஜ் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் நாகராஜ் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த மனைவி அருகில் சென்று பார்த்தார். அப்போது, நாகராஜ் ஏதோ விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ரெஜிமோள் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
பின்னர், இதுபற்றி குலசேகரம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story