தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2021 1:43 AM IST (Updated: 23 Sept 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் தமிழ்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை:
தமிழ்புலிகள் கட்சியினர் பாளையங்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். கரும்புலி குயிலி பேரவை மாவட்ட செயலாளர் தச்சை மாடத்தி முன்னிலை வகித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும். வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி நிர்வாகிகள் காளிதாஸ், வள்ளுவன், தலித்கண்ணன், தமிழ்மணி, பாளை. மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story