தேர்தல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் தஞ்சை வருகை
ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் தஞ்சைக்கு வந்தார். அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தஞ்சாவூர்:
ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் தஞ்சைக்கு வந்தார். அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
9&ந் தேதி தேர்தல்
தஞ்சை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இறப்பு மற்றும் ராஜினாமா, பல்வேறு காரணங்களால் கடந்த ஜூன் 6&ந் தேதி வரை ஏற்பட்டுள்ள 52 காலி பதவியிடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக அடுத்தமாதம்(அக்டோபர்) 9&ந் தேதி தேர்தல் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் சுமுகமாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் பார்வையாளராக அனில்மேஷ்ராம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், தேர்தல் தொடர்பான பணிகளை அடுத்தமாதம் 12&ந் தேதி வரை கண்காணித்திட வருகை புரிந்துள்ளார்.
கலந்தாய்வு கூட்டம்
இந்தநிலையில் தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளின் முன்னேற்றம் குறித்து தேர்தல் பார்வையாளர் அனில்மேஷ்ராம் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கூடுதல் கலெக்டர்(வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான தங்களது புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவித்திட தேர்தல் பார்வையாளரின் நேரடி செல்போன் எண்: 7402905800 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story