தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Sept 2021 1:58 AM IST (Updated: 23 Sept 2021 1:58 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தார்சாலை வேண்டும்

தஞ்சாவூர் மாநகராட்சி புதுப்பட்டினம் ஊராட்சியில் 5&வது வார்டு உள்ளது. இங்கு ரம்யா நகர், ஹரி நகர் போன்ற தெருக்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தார் சாலை வசதி இல்லை. இதனால் மேற்கண்ட தெருக்களில் உள்ள மண்சாலைகளில் மழை நேரங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செல்லும் போது கீழே விழுந்து காயமடைகின்றனர். சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேறும், சகதியுமாக காணப்படும் மண்சாலைகளை தார்சாலையாக அமைத்து தர வேண்டும். தேங்கி கிடக்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
&பொதுமக்கள், ரம்யாநகர், ஹரிநகர்.

பரிதாப நிலையில் பதிவுத்துறை அலுவலகம்

ஒரத்தநாடு பதிவுத்துறை அலுவலகம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அலுவலகத்தின் ஓடுகள் சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்தின் மேற்கூரையில் பாலித்தீன் கவர் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் எந்தநேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. மேலும் புதர்போல் மண்டி கிடப்பதாலும் அலுவலகத்திற்குள் விஷப்பூச்சிகள் படை எடுத்து உள்ளே நுழைந்து விடுகின்றன. இதனால் அதிகாரிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பதிவுத்துறை அலுவலகத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
-&பொதுமக்கள், ஒரத்தநாடு.

வேகத்தடை வேண்டும்

தஞ்-சா-வூர்&பட்-டுக்-கோட்டை சாலை-யில் புல-வன்காடு பள்-ளிக் கூ-டம் அருகே பஸ்-நி-றுத்-தம் உள்-ளது. இந்த பஸ்-நி-றுத்-தத்-தில் இருந்து நான்கு சாலை-கள் பிரி-கின்-றன. இந்-த-சா-லை-களின் நான்கு புற-மும் வாக-னங்கள் அதி-வே-கத்-தில் வரு-வ-தால் பல்-வேறு விபத்-துக்கள் நடை-பெற்று வரு-கின்-றன. மேலும் உயிர்-சே-த-மும் ஏற்-பட்-டுள்-ளது. இதன் அரு-கில் பள்-ளிக்கூ-டம் உள்-ள-தால் சாலையை கடக்க மாணவ&மாண-வி-கள்  சிர-மப்-ப-டு-கின்-ற-னர். எனவே மாவட்ட நிர்-வா-கம் உரிய நட-வ-டிக்கை எடுத்து உயிர்-ப-லியை தடுக்கும் வகை-யில் விபத்து ஏற்-ப-டும்  இடங்க-ளில் வேகத்-தடை அமைக்க வேண்-டும் என்று அப்-ப-குதி வாகன ஓட்-டி-கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
-&பழ-னி-சாமி, புல-வன்காடு.

கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வருமா?

தஞ்சை மாவட்டம் கொல்லாங்கரை ஊராட்சியில் கடந்த 2015&ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கிராம சேவைமையம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை இந்த சேவைமையம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் 5 கிலோமீட்டர் தூரமுள்ள மருங்குளத்திற்கு சென்று சாதிசான்று, வருமானசான்று, இருப்பிடசான்று போன்றவைகளை தனியார் சேவைமையத்தில் பணம் கொடுத்து பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நேரமும், பணமும் வீணாகுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  செயல்படாமல் உள்ள கிராமசேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
&பன்னீர்செல்வம், கொல்லாங்கரை.

தொற்றுநோய் பரவும் அபாயம்

தஞ்சை மாந-கர் கீழ-வா-சல் டவுன்க-ரம்பை 13&வது வார்டு 
பகு-தி-யில் பாதாள சாக்கடை கழிவு நீர் நிரம்பி சாலை-யில் வழிந்து ஓடு-கி-றது.  இத-னால் அந்த பகு-தி-யில் துர்-நாற்-றம் வீசு-கி-றது. சாலை-யில் கழி-வு-நீர் ஓடு-வ-தால் அந்த வழி-யாக செல்-லும் பள்ளி மாணவ&மாண-வி-கள், பொது-மக்கள் அதனை கடந்து செல்ல சிர-மப்-ப-டு-கின்-ற-னர். இந்த கழி-வு-நீ-ரால் கொசு-உற்-பத்-தி-யாகி, சுகா-தார சீர்-கேடு ஏற்-பட்டு தொற்-று-நோய்-ப-ர-வும் அபா-யம் உள்-ளது. எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் சாலை-யில் ஓடும் கழி-வு-நீரை அகற்றி, தொற்-று-நோய் பர-வு-வதை தடுக்க வேண்-டும் என்று அப்-ப-குதி பொது-மக்கள் கோரிக்கை விடுத்-துள்-ள-னர். 
-&பொது-மக்கள், கீழ-வா-சல். 


புதிய ரேஷன் கடை கட்டித்தரப்படுமா?

தஞ்-சா-வூர் மாவட்-டம் திரு-வோ-ணம் ஒன்-றி-யம் அக்க-ரை-வட்-டம் ஊராட்-சி-யில் தெற்கு தெரு உள்-ளது. இங்கு காஞ்-சி-ரான்க-டை-யில் உள்ள ரேஷன் கடை கட்-டி-டம் சேத-ம-டைந்து காணப்-ப-டு-கி-றது. மேலும் கட்-டி-டம் புதர்-மண்டி பரா-ம-ரிப்-பின்றி சிதி-ல-ம-டைந்து உள்-ளது. இத-னால்  ரேஷன் கடைக்கு வரு-ப-வர்கள் அசம்-பா-வி-தம் 
ஏற்-ப-டுமோ? என்ற 
அச்-சத்-து-டன் உள்-ள-னர். எனவே சம்-பந்-தப்-பட்ட அதி-கா-ரி-கள் அசம்-பா-வி-தம் ஏற்-ப-டும் முன்பு சேத-ம-டைந்த கட்-டி-டத்தை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்-தில் புதிய ரேஷன் கடை கட்-டித்-தர வேண்-டும் என பொது-மக்கள் கோரிக்-கை-யா-கும். 
&பொது-மக்கள், காஞ்-சி-ரான்கடை.

Next Story