கர்நாடக அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு


கர்நாடக அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 23 Sept 2021 2:02 AM IST (Updated: 23 Sept 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைதான விவகாரத்தில் அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைதான விவகாரத்தில் அரசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கர்நாடக ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குண்டர் சட்டத்தில் கைது

பெங்களூரு நகரில் வசித்து வருபவர் கார்த்திக் என்ற உல்லால் கார்த்திக். இவர், சிறு, சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கார்த்திக்கை பெங்களூரு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்திருந்தனர். தன்னை சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாகவும், இதற்கு உத்தரவு பிறப்பித்த போலீஸ் கமிஷனர் கமல்பந்த், இதற்கான அனுமதியை வழங்கி கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கார்த்திக் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஸ் சந்திரசர்மா முன்னிலையில் நடைபெற்று வந்தது.

ரூ.25 ஆயிரம் அபராதம்

அப்போது கார்த்திக் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் மீது குண்டர் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமே ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. வாலிபரின் சொந்த சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையாக இருக்கிறது, என்றார். இதற்கு அரசு தரப்பு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் மீது தாக்கல் செய்யப்பட்டகுண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அவரது சொந்த சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இருப்பதால், அவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். இந்த ரூ.25 ஆயிரத்தை கர்நாடக அரசு அபராதமாக செலுத்த வேண்டும் என்று தலைமை நீதிபதி சதீஸ் சந்திரசர்மா உத்தரவிட்டுள்ளார்.

Next Story