உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 38 பதவிக்கு 144 பேர் மனு தாக்கல்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 38 பதவிக்கு 144 பேர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 23 Sept 2021 2:11 PM IST (Updated: 23 Sept 2021 2:11 PM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 38 பதவிக்கு 144 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவள்ளூர், 

தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது,

இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இறப்பு, ராஜினாமா செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டத்தில் 38 பதவிகளுக்கு இடைத்தேர்தல் வருகின்ற அக்டோபர் 9-ந் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி தினம் என்பதால் காலியாக உள்ள 38 பதவிக்கு 144 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான காலியிடங்களான மீஞ்சூர் ஒன்றியத்தில் ஆலாடு, திருவெள்ளைவாயல் பூந்தமல்லி ஒன்றியத்தில் கொசவன்பாளையம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் தாமனேரியும், அதேபோன்று ஒன்றிய கவுன்சிலர்கள் காலியிடங்களான

பூண்டி ஒன்றியத்தில் உள்ள வார்டு எண் மூன்று, சோழவரம் ஒன்றியத்தில் வார்டு எண் 15 மற்றும் 18, திருவாலங்காடு ஒன்றியத்தில் வார்டு எண் ஒன்றிலும் மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 30 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 38 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியிட இடைத்தேர்தலுக்கு 144 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story