லாரியின் டயர் வெடித்ததில் கல் தெறித்து விழுந்து விவசாயி சாவு
சிங்கப்பெருமாள் ரெயில்வே கேட் அருகே லாரியின் டயர் வெடித்ததில் கல் தெறித்து விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த கொளத்தூர் ஊராட்சி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 48). விவசாயி. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிள் மூலம் சிங்கப் பெருமாள் கோவிலிருந்து தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
இதற்கிடையே, சிங்கப்பெருமாள் கோவில் ரெயிவே கேட் மூடப்பட்டிருந்த நிலையில், ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, இவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த லோடு லாரியின் பின்சக்கரம் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில், சாலையிலிருந்த கருங்கல் ஒன்று பெயர்ந்து தெறித்து முத்துவின் கண்ணில் விழுந்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட விபத்தில் இவரது பாதி முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story