கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு
போடிப்பட்டி உடுமலை வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
போடிப்பட்டி
உடுமலை வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
உழவர் உற்பத்தியாளர் குழு
உடுமலை வட்டாரத்துக்குட்பட்ட கிராமங்களில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிகாட்டும் திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், தோட்டக்கலை இணை இயக்குனர் பிரேமாவதி, தாசில்தார் ராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
மதிப்புக் கூட்டு எந்திரங்கள்
பள்ளபாளையம் கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு 2020&21 ம் ஆண்டில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட மதிப்புக்கூட்டும் வேளாண் கருவிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் தளி பகுதியில் நிலைக்கத்தக்க மானாவாரி திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நல்லாறு தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட தேங்காய் மதிப்புக்கூட்டு எந்திரங்களை ஆய்வு செய்தார். அத்துடன் செயல்படுத்தப்பட்டு வரும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி, தரம், விற்பனை, லாபம் உள்ளிட்ட விபரங்களைக் கேட்டறிந்து பாராட்டினார். மேலும் மானுப்பட்டியில் நுண்ணீர்ப் பாசனம் மற்றும் துணை நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பார்வையிட்டார்.
பசுமைக்குடில்
பெரிய வாளவாடியில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரம் மானியத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக் குடிலை ஆய்வு செய்தார். இந்த பசுமைக் குடிலின் மூலம் நாற்று உற்பத்தி செய்து மாதம் ரூ. 1 லட்சம் லாபம் ஈட்ட முடிவதாக விவசாயி தெரிவித்தார். மேலும் முக்கோணம் பகுதியில் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தில் வழங்கப்பட்ட நடமாடும் தக்காளி கூழாக்கும் எந்திரத்தை கலெக்டர் பார்வையிட்டார்.
Related Tags :
Next Story