கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 21 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 5 மாத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. ஊதிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி நேற்று மதியம் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முன் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் திருப்பூர் கிளை தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார் செயலாளர் ராஜூ பொருளாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
5 மாதம் ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதால் கவுரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்த மனுவை முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story