புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் வாழ்த்து - பூ-பரிசு பொருட்கள் வழங்கி வரவேற்பு
புற்றுநோயில் இருந்து மீண்டவர்களுக்கு நடிகர் எஸ்.வி.சேகர் பூ-பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்தி வரவேற்றார்.
சென்னை,
புற்றுநோய் பாதிப்பில் இருந்து போராடி குணம் அடைபவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் உலக ரோஸ் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி சென்னை மதுரவாயலில் பேட்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தவர்களை வரவேற்று வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், மதன்பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு புற்றுநோயில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு ரோஜா பூ மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மையத்தின் முதன்மை டாக்டர் விஜய ராகவன், இசைக்கவி ரமணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story