விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு


விருந்துக்கு சென்ற புதுமாப்பிள்ளை பரிதாப சாவு
x
தினத்தந்தி 23 Sept 2021 7:18 PM IST (Updated: 23 Sept 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

கயத்தாறு:
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விருந்துக்கு சென்று திரும்பிய புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

புதுமாப்பிள்ளை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சரவணன் (வயது 26). இவருக்கும், வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த 8-ந் தேதி திருமணம் நடந்தது. 

இந்த நிலையில் கயத்தாறு அருகே புதுமண தம்பதி தங்களது உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக சென்றனர். அங்கு இருந்து சரவணன் மட்டும் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கயத்தாறு&கடம்பூர் சாலையில் வந்து கொண்டு இருந்த போது, லேசான மழை பெய்தது.

பரிதாப சாவு

அப்போது, அங்கு சாலையோரத்தில் லாரி நின்று கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள், லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து, சப்&இன்ஸ்பெக்டர் பால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கயத்தாறு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story