முதியவரை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


முதியவரை வெட்டிக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 23 Sep 2021 2:58 PM GMT (Updated: 23 Sep 2021 2:58 PM GMT)

கயத்தாறு அருகே முதியவரை வெட்டிக்கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி:
கயத்தாறு அருகே முதியவரை வெட்டிக்கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி (வயது 26). இவர் கடந்த 23.1.2019 அன்று தனது குழந்தைகளை சத்தம் போட்டார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் (27) என்பவர் காளீஸ்வரி, இறந்து போன தனது தாயாரை திட்டியதாக கருதி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்து காளீஸ்வரியை அரிவாளால் வெட்ட முயன்று துரத்தினார்.

அப்போது அங்கு வந்த காளீஸ்வரியின் தாத்தா ஆறுமுகபெருமாள் (60) என்பவர் தடுக்க முயன்றார். அவரை பாலமுருகன் அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆறுமுகபெருமாள் கடந்த 3.2.2019 அன்று இறந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன் குற்றம் சாட்டப்பட்ட பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜர் ஆனார்.



Next Story