கீழ்வேளூர் அருகே தூக்குப்போட்டு மாணவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


கீழ்வேளூர் அருகே தூக்குப்போட்டு மாணவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Sept 2021 8:30 PM IST (Updated: 23 Sept 2021 8:30 PM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே தூக்குப்போட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிக்கல்,

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே எராவாஞ்சேரி ஊராட்சி பெரியார் திடல், பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகள் சுபஸ்ரீ (வயது 16). இவர் குருக்கத்தி அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் ராமச்சந்திரன், அவரது மனைவி இருவரும் வேலைக்கு வெளியே சென்று உள்ளனர். சுபஸ்ரீ பள்ளிக்கு சென்று இருந்தார். மாலை பள்ளியில் இருந்து சுபஸ்ரீ வீடு திரும்பினார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுபஸ்ரீ தான் அணிந்து இருந்த சுடிதாரின் துப்பட்டாவில் தின்னை தாழ்வாரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபஸ்ரீ ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் எரவாஞ்சேரி ஊராட்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story