4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2021 8:53 PM IST (Updated: 23 Sept 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து வேதாரண்யத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் பாரதிதாசன் கல்லூரி தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது இங்கு பணியாற்றும் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்து கவுரவ விரிவுரையாளர்கள், பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பளம் வழங்கப்படாதது குறித்து நேற்று கல்லூரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து நேற்று காலை முதல் கவுரவ விரிவுரையாளர்கள், கல்லூரி பணியாளர்கள் கல்லூரியின் உள்ளே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் 3 நாட்களுக்கு நடைபெறும் என கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தனர்

Next Story