கிணற்றில் பிணமாக மிதந்த 6-ம் வகுப்பு மாணவன்
சிவகாசி அருகே கிணற்றில் பிணமாக 6-ம் வகுப்பு மாணவன் மிதந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முருகன் (வயது 12).இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாரியப்பன் மற்றும் அவரது மனைவி இருவரும் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய மாரியப்பன் தனது மகன் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினார். மாணவன் முருகனை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருத்தங்கல் போலீசில் மாரியப்பன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் ஆலாவூரணி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாணவன் முருகன் பிணமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பிணத்தை மீட்டனர். மகனின் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. முருகனின் சாவு குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story