சட்டசபை முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா


சட்டசபை முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா
x
தினத்தந்தி 23 Sept 2021 9:57 PM IST (Updated: 23 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி சட்டசபை முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, செப்.
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்களது பணிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. 
இந்தநிலையில் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி முதல்&அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க நேற்று சட்டசபைக்கு அவர்கள் வந்தனர். ஆனால் அந்த நேரத்தில் ரங்கசாமி சட்டசபையில் இல்லை. 
இதனால் சட்டசபைக்குள் அவர்களை சபை காவலர்கள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து அங்கன்வாடி பணியாளர்கள் சட்டசபை எதிரே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story