மேலும் 82 பேருக்கு கொரோனா


மேலும் 82 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Sept 2021 10:04 PM IST (Updated: 23 Sept 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகினார்.


திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபோல் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகினார். 
82 பேருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று குறைந்தது. ஆனால் தற்போது ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 82 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
ஒருவர் பலி 
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 394ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 499ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 944 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 951ஆக உள்ளது. கொரோனா தொற்று முழுவதும் மாவட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் வராததால் அரசு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 


Next Story