கலாச்சாரம், பண்பாடு பாதிக்காத வகையில் மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம்
கல்லார்குடி அருகே கலாச்சாரம், பண்பாடு பாதிக்காத வகையில் மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
கல்லார்குடி அருகே கலாச்சாரம், பண்பாடு பாதிக்காத வகையில் மலைவாழ் மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று கண்காணிப்பு குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு குழு கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைக்கு எதிரான கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு குழு தலைவரும், சப்&கலெக்டருமான தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், அதன் தற்போதைய நிலை குறித்தும் போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறினர்.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அமுல்கந்தசாமி, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தமிழ்மணி, சீனிவாசன், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன், சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், தாசில்தார்கள் அரசகுமார், விஜயகுமார், சசிரேகா, வடக்கு ஒன்றிய அட்மா திட்ட தலைவர் சக்திவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அதிகாரிகள் பேசும்போது கூறியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்பு
பொள்ளாச்சி நகரம், கஞ்சம்பட்டி, காட்டம்பட்டி, நெகமம் ஆகிய பகுதிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைகள் நடந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் சமூக, மனித உரிமைகள் பிரிவு போலீசார் 15 நாட்களுக்கு ஒரு முறை சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் அங்கு பொதுமக்களுக்கு தேவையான சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அருகே கல்லார்குடி தெப்பக்குள மேடு பகுதி மலைவாழ் மக்கள், தனியார் எஸ்டேட்டில் வசித்து வருகின்றனர்.
அவர்களின் கலாச்சாரம், பண்பாடு பாதிக்காத வகையில் கல்லார்குடி அருகே மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிட்டசூராம்பாளையத்தில் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியான தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story