கல்வராயன்மலை வாக்கு எண்ணும் மையத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு


கல்வராயன்மலை வாக்கு  எண்ணும் மையத்தில் திட்ட  இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sept 2021 10:25 PM IST (Updated: 23 Sept 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலை வாக்கு எண்ணும் மையத்தில் திட்ட இயக்குனர் ஆய்வு

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 171 மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 15 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 131 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 7 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஒரு மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 91 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வராயன்மலை ஒன்றியத்தில் வெள்ளிமலை ஏவலையா உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் உள்ளது. இதை மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு செய்தார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும், தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், உதவி பொறியாளர் அருண் ராஜா, அலுவலக மேலாளர் அழகுராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story