பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை
அருப்புக்கோட்டை அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் துப்புரவு பணி செய்து வரும் கணவரை இழந்த பெண்ணின் 17 வயது மகள், 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story