கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா


கல்லூரி மாணவிகள் 5 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Sept 2021 11:26 PM IST (Updated: 23 Sept 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், கல்லூரி மாணவிகள் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில், கல்லூரி மாணவிகள் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அரசு பெண்கள் பள்ளி ஆசிரியைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 
5 மாணவிகளுக்கு கொரோனா
மயிலாடுதுறையில் உள்ள ஒரு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று முன்தினம்(புதன்கிழமை) வெளியூரில் இருந்து வந்த மாணவிகள் 5 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை பரிசோதனை செய்ததில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. 
இதனையடுத்து அந்த வகுப்பு மாணவிகள், ஆசிரியர்கள் என 369 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 2 ஆயிரத்து 500 மாணவிகள் படித்து வரும் கல்லூரி என்பதால் உடனடியாக கல்லூரி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் கலந்து ஆலோசனை நடத்தியது. இதனைத்தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 நாட்கள் கல்லூரிக்கு விடுமுறை அளிப்பது என்றும், 4 நாட்களுக்கு பாடங்களை ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை நடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 
அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை அந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனை செய்யப்பட்ட 369 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் நேற்று தெரிய வந்தது. ஆகையால் வருகிற திங்கட்கிழமை அன்று கல்லூரி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
பள்ளி ஆசிரியைக்கு கொரோனா
இதேபோல அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. உடனடியாக நேற்று அந்த ஆசிரியை பாடம் நடத்திய வகுப்புகளில் உள்ள மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 
பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Next Story