வீட்டு பட்டாக்களை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
வீட்டு பட்டாக்களை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்
ஆம்பூர்
ஆம்பூரை அடுத்த வன்னியநாதபுரம் பகுதியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக தனியார் நிலத்தின் வழியாக சென்று வந்தனர். இந்தநிலையில் தனியார் நில உரிமையாளர் திடீரென அந்தவழியில் யாரும் செல்லாத படி அடைத்துவிட்டார். இதனால் வழியில்லாமல் பாதிக்கபட்ட பொதுமக்கள் தங்களது வீட்டு பட்டாக்களை மிட்டாளம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒப்படைக்க வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story