அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின்ர் ஆர்ப்பாட்டம்


அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின்ர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2021 6:10 PM GMT (Updated: 23 Sep 2021 6:10 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின்ர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து வருகிற 27-ந்தேதி நடைபெறும் பாரத் பந்த்க்கு ஆதரவு தெரிவித்தும், 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை 4 தொகுப்பாக மாற்ற கூடாது. மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு எல்.பி.எப். மாவட்ட தலைவர் அண்ணாவேலு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை பொது செயலாளர் பாலசுப்பிரமணியன், ஏ.ஐ.டி.யூ.சி. பூபதி, ஐ.என்.டி.யூ.சி. கோவிந்தராஜ் உள்பட போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அரவக்குறிச்சி
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில சம்மேளன நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், பொருளாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story