தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 24 Sept 2021 12:08 AM IST (Updated: 24 Sept 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயன்பாடின்றி உள்ள நீர்த்தேக்க தொட்டி
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம்,  மேத்யூ நகரில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கடந்த ஒரு ஆண்டாக குடிநீர் வினியோகம் செய்யாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
சத்தியமூர்த்தி, மேத்யூ நகர். கரூர். 

வால்வு உடைந்து வீணாகும் குடிநீர் 
கரூர் மாவட்டம் வெங்கமேடு பிட்டர் பழனியப்பன் தெருவில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் தெருக்குழாய் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குழாயின் திருவு குழாய் உடைந்து எந்தநேரமும் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க குடிநீர் வீணாகி வருவதை தடுக்க வேண்டும். 
பொதுமக்கள், வெங்கமேடு, கரூர். 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கோமாகுடி கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே அப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோமாகுடி, திருச்சி. 

தவறாக எழுதப்பட்டுள்ள பெயர் பலகை 
அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் திருச்சி- சிதம்பரம் நெடுஞ்சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்காக  ஊர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர் பெயர் பலகையில் தமிழில் எழுதப்பட்டுள்ள பெயர் சரியாக உள்ளது. அதுவே ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள பெயர், கீழபழூ   என தவறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கிரிதரன், கீழப்பழூர், அரியலூர்.

குண்டும், குழியுமான சாலை 
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முதல் பெரியாயி கோவில் அருகேயுள்ள பாலாம்பாடி-அருமடல் கிராம இணைப்பு சாலை வரை  சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்காலும் சரிந்து விழுந்துள்ளன. மேலும் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில்  ஆங்காங்கே அவ்வப்போது விரிசலடைந்து தண்ணீர் கசிந்து வீணாவதோடு சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமார் அய்யாவு, செங்குணம், பெரம்பலூர்.

குரங்குகள் தொல்லை அதிகரிப்பு 
திருச்சி லால்குடி 12-வது வார்டு சீனிவாசபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் அதிக அளவில் குரங்குகள் உள்ளன. இவை அப்பகுதியில் உள்ள மா, பலா, கொய்யா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்துவதுடன், வீடுகளில் வைத்திருக்கும் தின்பண்டங்களை எடுத்துச்சென்றுவிடுகிறது. மேலும் அப்பகுதியில் நடந்து செல்லும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும். 
ஜார்ஜ், சீனிவாசபுரம், திருச்சி. 

வேகத்தடை அமைக்க வேண்டும்
பெரம்பலூர் ரோடு செல்வா நகர் பகுதி பிரதான சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்ற வருகின்றன. இதில் ஒருசில வாகனங்கள்  அதிவேகமாக செல்வதால்  விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில், சாலையில் வேகத்தடை  அமைக்க வேண்டும். 
பெரியசாமி, பெரம்பலூர்.

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
புதுக்கோட்டை நகராட்சி 24-வது வார்டு திருவப்பூர் ஈஸ்வரன் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள கழிவு நீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் அங்கு கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், புதுக்கோட்டை. 

தனியார் பஸ்களின் வேகம் குறைக்கப்படுமா?
புதுக்கோட்டை திருச்சி பிரதான சாலையில் உள்ள கீரனூர் நகரத்திற்கு வரும் தனியார்  பஸ்கள் அதிவேகமாக செல்வதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தனிபார் பஸ்களின் வேகத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞான சேகரன், கீரனூர்,  புதுக்கோட்டை.

மேற்கூரையின்றி காணப்படும் கோவில்
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் அணியாப்பூர் கிராமம் அரசுநிலைபாளையத்தில் பழமையான சேப்பெருமாள் கோவில் உள்ளது.  கஜாபுயலின் போது இந்த கோவிலின் மேற்கூரைகள் காற்றில் அடித்துசெல்லப்பட்டு சேதம் அடைந்தன. இந்த நிலையில் கோவிலில் உள்ள சாமி சிலைகள் மழை, வெயிலில் இருந்து சேதம் அடைகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுசாமி, அணியாப்பூர் கிராமம், திருச்சி.

சாலையில் செல்லும் கழிவுநீர்  
திருச்சி ஜங்ஷன் வாட்டர் டேங்க் அருகில் பல நாட்களாக கழிவுநீர் வாய்க்கால் சரிசெய்யப்படாமல் கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி  அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கீர்த்திவாசன், திருச்சி. 

பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள் 
திருச்சி மாவட்டம் முசிறியில் நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தும்போது, அவர்கள் நிலைதடுமாறி கிழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் வகையில் கடிக்க வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், முசிறி, திருச்சி. 
இதேபோல் ஸ்ரீரங்கம் தாலுகா எட்டரை கிராமத்தில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கின்றது. இதனால் இரவு நேரங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். குழந்தைகளை நாய்கள் கடிக்க கூடிய ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், எட்டரை, திருச்சி. 

வீணாகும் குடிநீர் 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம்,  தாப்பாய் கிராமத்தில், பஸ் நிலையத்திற்கு முன்பு உள்ள  சாலையேரத்தில் செல்லும்  குடிநீர் குழாய் பாதையில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சாலையும் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கிருஷ்ணன், தாப்பாய் கிராமம், திருச்சி. 

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், திருவெள்ளறை கீழ வீதி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது அடைகிறது. மேலும் மழை பெய்யும் போது சாலையில் இருக்கும் பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ரங்கராஜன், திருவெள்ளறை, திருச்சி. 

பஸ்கள் இயக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் இருந்து புளியஞ்சோலைக்கு கொப்பம்பட்டி, வைரி செட்டி ப்பாளையம், ஏரிக்காடு, பசலி கோம்பை வழியாக பஸ் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், வைரி செட்டிபாளையம், திருச்சி.

வடிகால் வசதி வேண்டும்
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 40வது வார்டு அரசு காலனியில் உள்ள காலி மனைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த மழைநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவ வாய்ப்பு உள்ளது. இதேபோல் அரசு காலனி 3வது தெருவில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்திவிட்டு, அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 
தங்கவேல், அரசு காலனி, திருச்சி. 

Next Story