குடிநீர் பிடித்ததில் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு


குடிநீர் பிடித்ததில் மோதல்; பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 Sept 2021 1:28 AM IST (Updated: 24 Sept 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிடித்ததில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பூமிதேவனின் மனைவி ஆனந்தி(வயது 30). அதே பகுதியில் வசிக்கும் அன்புமணியின் மனைவி வசந்தா(50). இவர்கள் இருவரும் தெரு குழாயில் குடிநீர் பிடித்தபோது, அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில் பூமிதேவன், அவரது மனைவி ஆனந்தி, உறவினர் ராமசாமி, அவரது மனைவி லெட்சுமி மற்றும் அன்புமணி, வசந்தா ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் காயமடைந்த ஆனந்தி, வசந்தா ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீசில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story