மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு + "||" + The case against the man who attacked the woman

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கல்லடி தெருவை சேர்ந்தவர் ராஜகுமாரி(வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). ராஜகுமாரியின் மகன் ராஜ்குமார் என்பவர் பாலகிருஷ்ணனின் வீட்டில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், ராஜ்குமாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராஜகுமாரியிடம், பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், ராஜகுமாரிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதில் பாலகிருஷ்ணன் ராஜகுமாரியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ராஜகுமாரி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் ராஜகுமாரி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு
பணமோசடி செய்ததாக அளிக்கப்பட்ட 2 புகார்களை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. ஓசூர் அருகே மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஓசூர் அருகே மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு
வளநாடு அருகே கிராவல் மண் அள்ளியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
4. ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது வழக்கு
போலி ஆவணம் கொடுத்து ரெயில்வேயில் வேலை வாங்க முயன்ற தாய்-மகன் மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.