தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளின் விவரங்களை காணலாம்.
திண்டுக்கல் :
மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்
வேடசந்தூர் அருகே இ.சித்தூரை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியில் மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பலமிழந்த நிலையில் உள்ளன. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நட்டு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முககுமார், நல்லமநாயக்கன்பட்டி.
பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?
பழனி தாலுகா அ.கலையம்புத்தூரில் இருந்து ராஜாபுரம் செல்லும் வழியில் சாத்தான் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்காக அ.கலையம்புத்தூர்-ராஜாபுரம் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஓடை அமைந்துள்ள இடத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் மழைக்காலங்களில் ஓடையில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது தரைப்பாலம் மூடப்பட்டு சாலையும் துண்டிக்கப்படும். இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் பாலம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சென்றாயகுமார், ராஜாபுரம்.
சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்
பழனியை அடுத்த சிவகிரிபட்டி ஊராட்சி 4-வது வார்டு இடும்பன்நகர் பகுதியில் கடந்த பல நாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் குப்பை தொட்டி நிரம்பியதால் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனடியாக அள்ளிச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிக்கண்ணன், பழனி.
இரவில் எரியாத தெருவிளக்குகள்
ஆத்தூர் தாலுகா பாளையான்கோட்டை பஞ்சாயத்து பிரவான்பட்டி கிராமத்தில் இரவில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்குகள் முறையாக எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், பிரவான்பட்டி.
தொல்லை தரும் தெருநாய்கள்
பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருவில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் விரட்டிச்சென்று கடிக்கிறது. எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெகநாதன், பச்சளநாயக்கன்பட்டி.
முறையாக குடிநீர் வழங்க வேண்டும்
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி புஷ்பத்தூரில் கடந்த பல நாட்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முறையாக குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளிமுத்து, புஷ்பத்தூர்.
தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகள்
ஒட்டன்சத்திரம் காந்திநகர் 5-வது வார்டு பகுதியில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் சென்றுவிட்டு அப்படியே தெருக்களில் சுற்றித்திரிவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கீதகுமார், காந்திநகர்.
மண்மேடான சாலை சமன்படுத்தப்படுமா?
சின்னமனூரில் உள்ள தனியார் பள்ளி அருகே சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கால்வாயை ஒட்டி சாலையில் தோண்டப்பட்ட குழிகள் முறையாக மூடப்படவில்லை. இதனால் அந்த சாலை மண்மேடாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சமன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமசிவம், சின்னமனூர்.
ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் அவதி
பெரியகுளம் நகராட்சி பகுதியில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், பெரியகுளம்.
வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
கம்பத்தில் இருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வாகன ஓட்டிகளுக்கு இந்த வேகத்தடை சரியாக தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே வேகத்தடை மீது வெள்ளைக்கோடு வரைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலாஜி, சின்னமனூர்.
Related Tags :
Next Story