தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்&அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
திருப்பத்தூர்
உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து வெற்றிபெற வேண்டும் என்று முன்னாள் முதல்&அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக 9 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதற்கட்டமாக திருப்பத்தூரில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் டி.டி.குமார் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதல்&அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
தில்லுமுல்லுகளை முறியடித்து...
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லுகளை முறியடித்து அ.தி.மு.க.வினர் வெற்றிபெற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நடந்தது? என்பது மக்களுக்கு தெரியும். Ôநீட்Õ தேர்வு விவகாரத்தில் தி.மு.க. பச்சைப்பொய்யை மக்களிடம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என மக்களை ஏமாற்றி வருகின்றனர். பச்சைப் பொய்யை கூறி ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகை கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படவுள்ளது. அதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் போட்டுள்ளார்கள்.
ஓட்டுகளைபெற பச்சை பொய்யை சொல்லி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டு, புத்தகம், சைக்கிள்கள் எல்லாம் வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்தது. படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. நீட்தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ&மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. இதன் மூலம் 485 மாணவ& மாணவிகள் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதனடிப்படையில் தற்போது தி.மு.க. அரசு சட்டக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அறிவித்துள்ளனர். அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.
நிறைவேற்றமாட்டார்கள்
கிராமப்புற ஏழை எளிய மக்களுக்காக அ.தி.மு.க. அரசு பசுமை வீடு திட்டம் கொண்டு வந்தது, இதன் மூலம் ஏராளமானோருக்கு வீடு கிடைத்தது. கிராம மக்கள் பொருளாதாரம் மேம்பட இலவச கறவை மாடு, ஆடுகள், கோழி, வழங்கப்பட்டது. இதன் மூலம் கிராம மக்கள் பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. அ.தி.மு.க.வினர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யவேண்டும். மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள ஒரே துறை உள்ளாட்சித்துறை தான். குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வினர், அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு செய்த சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தி.மு.க. தேர்தல் நேரத்தில் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியில் 2 ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறினார்கள். ஆனால் கடைசி வரை நிலத்தை காட்டாமலேயே போய்விட்டார் கருணாநிதி.
மக்களைபற்றி சிந்திக்கவில்லை
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் ஆகிறது. இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கொண்டுவந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். புதிய திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை. 4 மாத ஆட்சியில் அ.தி.மு.க.வினர் மீது வழக்குப் போடுவது, அவதூறு பிரசாரம் செய்வது, முன்னாள் அமைச்சர் வீடுகளில் ரெய்டு நடத்துவது போன்றவற்றை பணியாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. மக்களுக்காக இருக்கக்கூடிய ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே.
நான் 4 வருடம் 2 மாதம் முதல்&அமைச்சராக இருந்தேன். நான் நினைத்து இருந்தால் எவ்வளவு வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. அ.தி.மு.க. மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு நல்லது செய்வோம், உழைத்து சொந்தக் காலில் நிற்பவர்கள் அ.தி.மு.க.வினர். எங்களுக்கு எதைகண்டும் பயமில்லை. மடியில் கனமில்லை. அ.தி.மு.க.வினருக்கு அச்சம் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மாணவர்கள் நாங்கள். எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் லட்சியம். இரவு பகல் பாராமல் மக்களை சந்தியுங்கள், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெருங்கள். நன்றாக பணிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடியுங்கள். திருப்பத்தூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர்கள் டாக்டர் என்.திருப்பதி, சிவாஜி, மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.நாகேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story