புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்க மக்கள் கோரிக்கை
புதிய தண்ணீர் குழாய்கள் அமைக்க மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
போகலூர்,
போகலூர் பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் எட்டிவயல் கிராமத்திற்கு அருகில் உள்ள முகம்மதியாபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கு குடிப்பதற்கு போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் காவிரி கூட்டு குடிநீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர் இந்த தண்ணீரும் போதிய அளவுக்கு வராமலும் உள்ளது வரும் கொஞ்ச அளவு தண்ணீரை கூட மக்கள் பல மணி நேரம் காத்திருந்து பிடிக்கும் நிலைமைக்கு உள்ளது ஏனென்றால் தண்ணீர் வரும் குழாய் மிகச்சிறிய அளவில் உள்ளதால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து பிடிக்கும் அவல நிலை உள்ளது ஆகையால் இந்த சிறிய குழாயை சீரமைத்து புதிய குழாய்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைகின்றனர்.
Related Tags :
Next Story