திருக்கழுக்குன்றம் அருகே பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு


திருக்கழுக்குன்றம் அருகே பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 24 Sept 2021 4:16 PM IST (Updated: 24 Sept 2021 4:16 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலா (வயது 42). மளிகைக் கடை நடத்தி வரும் இவர், கடந்த 20-ந் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். நடுவகக்கரை பகுதியில் வந்தபோது பின்னால் 2 சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் திடீரென இவரது கழுத்தில் கிடந்த 4½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றார்.

இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர், சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட மர்மநபரைத் தேடி வருகிறார்கள்.

Next Story