கல்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி


கல்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலி
x
தினத்தந்தி 24 Sept 2021 4:26 PM IST (Updated: 24 Sept 2021 4:26 PM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அருகே கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியானார்.

கல்பாக்கம், 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 21-ந்தேதி இரவு 7 மணியளவில் கூவத்தூர் பஜார் வீதியில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் கிழக்கு கடற்கரைச்சாலையின் குறுக்கே சென்ற போது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது பலமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story