உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும்
செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றிபெற செய்யவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதி 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஊரப்பாக்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும், ஊரகத் தொழில்துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.ஆராமுதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசும்போது, தி.மு.க. அரசின் 4 மாத சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளில் 100 சதவீதம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிபெற செய்யவேண்டும் என பேசினார்.
Related Tags :
Next Story