புன்னக்காயல் தூயராஜ கன்னிமாதா ஆலய திருவிழா
புன்னக்காயல் தூய ராஜகன்னிமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகே புன்னக்காயல் தூய ராஜகன்னி மாதா ஆலயத்தில் 470&வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பக்தர்களின் நேர்ச்சைக்கொடிகள் ஆலயத்திற்கு கொண்டு வந்து அனைவரும் கொடிகளுடன் ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக மேளதாளத்துடன் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கொடிமரத்தை வந்து அடைந்தது. பின்னர் வீரபாண்டியன்பட்டணம் பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், மணப்பாடு யாகப்பர் ஆலய பங்குத்தந்தை லெரின் டிரோஸ் அடிகளார், ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார், புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் ஆகியோர் அர்ச்சித்து கொடியேற்றினர். அப்போது புறாக்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து ஆலயத்தில் மாலை ஆராதனை, திவ்ய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.
திருவிழா வருகிற 3&ந் தேதி வரை நடைபெறுகிறது. அன்று தூய ராஜகன்னி மாதா தேரோட்டமும், திருவிழா ஆடம்பர திருப்பலியும் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை பங்கேற்கிறார். கொடியேற்றத்தை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை ஊர் கமிட்டி தலைவர் அமல்ஸன் மற்றும் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், உதவி பங்குத்தந்தை சுதர்சன் அடிகளார் மற்றும் ஊர் கமிட்டியினர் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story