திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ரூ.380 கோடிக்கு விளைபொருள், காலணி, கன்வேயர்பெல்ட் ஏற்றுமதி


திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து ரூ.380 கோடிக்கு விளைபொருள், காலணி, கன்வேயர்பெல்ட் ஏற்றுமதி
x
தினத்தந்தி 24 Sept 2021 6:46 PM IST (Updated: 24 Sept 2021 6:46 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வேளாண் விளைபொருட்கள் மற்றும் காலணி, கன்வேயர் பெல்ட் போன்ற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ரூ.380 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் முருகேஷ் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வேளாண் விளைபொருட்கள் மற்றும் காலணி, கன்வேயர் பெல்ட் போன்ற பொருட்கள் வெளிநாடுகளுக்கு ரூ.380 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் முருகேஷ் பேசினார்.

ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 20&ந் தேதி முதல் வர்த்தக மற்றும் வணிக வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் Õஏற்றுமதியில் ஏற்றம் & முன்னணியில் தமிழ்நாடுÔ என்ற வகையில் ஏற்றுமதிக்கு வழிவகுக்கும் மாவட்டமாக மாற்ற ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு நடந்தது. சென்னை வெளிநாட்டு வர்த்தக துறை மண்டல கூடுதல் இயக்குனகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் ஆகியவை சார்பில் இந்த கருத்தரங்கம் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ப.மாரியம்மாள் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் விளக்கவுரை ஆற்றினார். 

கருத்தரங்கை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழக முதல் அமைச்சர் வழிகாட்டுதலின்படி மேட் இன் இந்தியா போல மேட் இன் தமிழ்நாடு என்ற குரல் ஒலிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். அதன்படி ஏற்றுமதியில் ஏற்றம்  முன்னணியில் தமிழ்நாடு என்ற வகையில் இம்மாவட்டத்தை எற்றுமதிக்கு வழிகாட்டும் மாவட்டமாக மாற்ற தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை முன்வர வேண்டும்.

அதிக நெல் பயிர் விளைச்சல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உலக அளவில் சந்தைப்படுத்த மாவட்ட ஏற்றுமதி மையம் ஒன்று திருவண்ணாமலையில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் அதிக அளவு நெற்பயிர் விளைச்சல் கொண்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னணியில் உள்ளது. 

ஆரணி, களம்பூர், செங்கம் ஆகிய பகுதிகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலைகளில் நெல் அரவை செய்யப்பட்டு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டு உள்ள நெல்லை அரிசி ஆலை உரிமையாளர்கள் அரவை செய்ய முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 அரிசி, நிலக்கடலை, காலணி தயாரிப்புகள், கன்வேயர் பெல்ட் போன்ற பொருட்கள் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அதில் ஆண்டிற்கு ரூ.380 கோடி அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரணியில் தயாரிக்கப்படும் பட்டுச்சேலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது. அலுமினியம் வார்ப்பு தொழிற்சாலைகள் மூலம் தரமான தானியங்கி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஏற்றுமதிக்கான வழிமுறைகள்

மாவட்டத்தில் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள அரிசி, நிலக்கடலை, காலணி தயாரிப்புகள், ஆரணி பட்டு, வாகன உற்பத்தி உதிரிபாகங்கள், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தப்பட்ட பொருட்கள், நாமக்கட்டி, மலைத்தேன் மற்றும் மிளகாய் ஆகியவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பயன்பெறலாம். 

இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் இந்திய வங்கியின் மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மணிராஜ், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளரும், நெல் அரிசி வணிக சங்கங்களின் சம்மேளனத்தை சேர்ந்த நடராஜன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தை சேர்ந்த பி.ஜி.வேணுகோபால் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் சலுகைகள் குறித்து உதவி பொறியாளர் விஜயராஜ், பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை நபா£¢டு வங்கியை சேர்ந்த ஸ்ரீராம், ஏற்றுமதிக்கான வங்கிக்கடன் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் போன்றவை குறித்து பல்வேறு வங்கி அலுவலர்கள் பேசினர்.

Next Story