ஏற்றுமதி வாய்ப்புகளை தொழில்முனைவோர் பயன்படுத்த வேண்டும்
ஏற்றுமதி வாய்ப்புகளை தொழில்முனைவோர் பயன்படுத்த வேண்டும்
ஊட்டி
நீலகிரியில் தயாராகும் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை தொழில்முனைவோர் பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.
ஏற்றுமதி கருத்தரங்கம்
மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறையின் வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் அலுவலகம், நீலகிரி மாவட்ட தொழில் மையம் ஆகியவை சார்பில் ஏற்றுமதி வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது
நீலகிரியில் முதன்மையான தொழில் தேயிலைத்தூள் உற்பத்தி ஆகும். அது, மற்ற இடங்களை காட்டிலும் தரம் மற்றும் சுவை மிகுந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூளை உலக அளவில் கொண்டு செல்ல நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
தீர்வு காண வேண்டும்
கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் காபி பயிரிடப்படுகிறது. காபி உற்பத்தி நிறுவனங்கள் தங்களது பொருட்களை ஏற்றுமதி செய்ய முன்வர வேண்டும். ஊட்டி வர்க்கி, சாக்லேட் தமிழக மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. எனவே அதை ஊட்டிக்கு வருகிறவர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.
பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சில நிறுவனங்கள் சாக்லேட் உற்பத்தி செய்து ஏற்றுமதி ஆகின்றன. தோடர் எம்பிராய்டரி, ஊட்டி சாக்லேட், வர்க்கி தனித்துவம் உள்ளது. எனவே அது போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.
தொழில்முனைவோர்
கடந்த 2 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகள் அறுவடை செய்யப்படுகிறது. இது ரசாயன பொருட்கள் கலப்படம் இல்லாததால், அதிக லாபம் பெறலாம். எனவே நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story