ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி
ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 மாணவிகளுக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9&ம் வகுப்பு முதல் பிளஸ்&2 வரை 1,270 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பிளஸ்&1 படிக்கும் ஒரு மாணவிக்கு நேற்றுமுன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த மாணவிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தது.
இதையடுத்து சுகாதாரத்துறை துறை அதிகாரிகள் பள்ளியில் முகாமிட்டு 9&ம் வகுப்பு முதல் பிளஸ்&2 வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்தனர். சுழற்சி முறையில் பள்ளி நடைபெறுவதால் நேற்று பள்ளிக்கு வந்த 750 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, காய்ச்சல் பரிசோதனை, டைபாய்டு, மலேரியா, டெங்கு, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இதில் 8 மாணவிகளுக்கு காய்ச்சல் உள்பட கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அந்த மாணவிகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனை செய்யப்பட்ட மாணவிகளுக்கான மருத்துவ முடிவுகள் இன்று (சனிக்கிழமை) தெரியவரும். மீதமுள்ள 520 மாணவிகளுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story