நகை திருட்டு


நகை திருட்டு
x
தினத்தந்தி 24 Sept 2021 8:41 PM IST (Updated: 24 Sept 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

நகை திருட்டு குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் படவெட்டிவலசை பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம் மனைவி ஜோதி (வயது64). இவர் உடல்நிலை சரியில்லாததால் ராமநாதபுரம் பாரதிநகருக்கு வந்து மருந்து மாத்திரை வாங்கிவிட்டு பட்டணம்காத்தான் பகுதியில் உள்ள மகன் வீட்டிற்கு செல்வதற்காக டவுன்பஸ்சில் ஏறி சென்றுள்ளார். பட்டணம்காத்தான் பஸ்நிறுத்தம் பகுதியில் இறங்கியவுடன் தனது கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story