தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் அம்மன்புரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் 18&வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபானக்கடையுடன் இணைந்த மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த தகவலை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story