திருச்செந்தூர் மணி மண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கனிமொழி எம்.பி,அமைச்சர் கீதாஜீவன் மரியாதை


திருச்செந்தூர் மணி மண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் கனிமொழி எம்.பி,அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
x
தினத்தந்தி 24 Sept 2021 9:21 PM IST (Updated: 24 Sept 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் மணி மண்டபத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிவந்தி ஆதித்தனாரின் உருவச்சிலைக்கு அரசு சார்பில் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திருச்செந்தூர்:
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86&வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
பத்திரிகை, கல்வி, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 86&வது பிறந்த நாள் விழா நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:&
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், தி.மு.க. தலைவர் கலைஞரின் நீண்ட நாள் நண்பர். தலைவர் கருணாநிதி மீது அன்பும், பாசமும் மாறாது இருந்தவர். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் தந்தை சி.பா.ஆதித்தனார் மீது எவ்வளவு அன்போடு இருந்தாரோ, அதேபோன்று இவர் மீதும் கருணாநிதி அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
சிவந்தி ஆதித்தனார் புகழ் ஓங்குக
சிவந்தி ஆதித்தனார் பத்திரிகைத்துறை மட்டுமின்றி, விளையாட்டு துறையில் வீரர்கள் பலரை ஊக்கப்படுத்தி, அவர்கள் சாதனை படைக்க தன் வாழ்நாளில் மிகப்பெரிய உதாரணமாகவும், உறுதுணையாகவும் திகழ்ந்தார். இன்றுவரை மக்கள் தேடித்தேடி படிக்கக்கூடிய பத்திரிகையான தினத்தந்தியை வளர்ச்சி பெற்ற நிறுவனமாக உருவாக்கிய பெருமை சிவந்தி ஆதித்தனாருக்கு உண்டு.
அவரது மறைவு இன்றளவும் எனக்கும், தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன். முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து, அவரது திறமையை எப்போதும் போற்றும் வகையில் இருந்தவர் சிவந்தி ஆதித்தனார். அவரது இழப்பை மறக்கவே முடியாது. அவரது புகழ்
ஓங்குக.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, யூனியன் தலைவர்கள் ஆழ்வார்திருநகரி ஜனகர், உடன்குடி பாலசிங், ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் எல்லமுத்து, துணை தலைவர் ஜெகதீஷ் வி.ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
அ.தி.மு.க.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், நகர செயலாளர்கள் காயல் மவுலானா, செந்தமிழ் சேகர், ஆறுமுகநயினார், திருச்செந்தூர் யூனியன் துணை தலைவர் ரெஜிபர்ட் பர்னாந்து, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு, துணை தலைவர் கண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் உள்ளிட்டவர்களும், அ.ம.மு.க சார்பில் மாநில அமைப்பு செயலாளர்கள் ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ், தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியதை செலுத்தினர்.
பா.ஜனதா, இந்து முன்னணி
பா.ஜனதா சார்பில் மாநில வர்த்தக பிரிவு தலைவர் ராஜகண்ணன், நகர மண்டல தலைவர் சரவணன் உள்ளிட்டவர்களும், இந்து முன்னணி சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், கோட்ட செயலாளர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் பிரபாகர், மாவட்ட துணை தலைவர் கசமுத்து, திருச்செந்தூர் நகர பொதுச்செயலாளர் முத்துராஜ் உள்ளிட்டவர்களும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலை செழியன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் ரகுவரன், தொகுதி அமைப்பாளர் லட்சுமணன், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட துணை செயலாளர் ஜிலைட்டா, தொழிலாளர் விடுதலை முன்னணி ஒன்றிய துணை அமைப்பாளர் வேலவன், மாவட்ட வக்கீல் பிரிவு துணை அமைப்பாளர் ஹரிச்சந்திரன் உள்ளிட்டவர்களும், நாம் இந்தியர் கட்சி மாநில பொருளாளர் பேரூரணி து.ஜெய்கணேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், லட்சிய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் நெல்லை ஜீவா, தமிழக மாணவர் இயக்க மாநில செயலாளர் சிவநேசன் உள்ளிட்டவர்களும் மரியாதை செலுத்தினர்.
நாடார் சங்கம், நற்பணி மன்றம்
தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் சண்முகவேல் நாடார், பொருளாளர் செல்வராஜ் நாடார், ஆட்சி மன்றக்குழு தலைவர் கணேசன், இயக்குனர்கள் தங்கவேல், காமராஜ், ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் ஜெயராஜ், சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் மகாராஜன், காயாமொழி மன்ற செயலாளர் மொகதூம் முகம்மது, மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி, செல்லத்துரை, மனோகர், நெல்லை மாநகர தலைவர் பாக்கியராஜ், ஆயுட்கால உறுப்பினர்கள் சண்முகவேல், அம்பிகண்ணன், ராஜேஷ், பாலகுமார், அஜித்குமார்,
காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளர் ஐஜின், மாவட்ட துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாணவர் அணி தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் மகேஷ், நகர செயலாளர் ராஜேஷ், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் பழனி, வக்கீல் பிரிவு தலைவர் அருண், இளைஞர் அணி ரமேஷ்,
காயாமொழி ஊர் மக்கள் சார்பில் ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ் ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், துணை தலைவர் திருநாவுக்கரசு, நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், பாஸ்கர், வேலவன், செயலாளர் ஆனந்த ஜவகர், நாராயணன், சேகர்,
தேசிகா அறக்கட்டளை தலைவர் குமரகுருபர ஆதித்தன், வக்கீல் நடேச ஆதித்தன், ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், முருகன் ஆதித்தன், பிச்சிவிளை கூட்டுறவு சங்க தலைவர் தேவராஜ், திருச்செந்தூர் மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் பத்மநாபன், ராகவன், லட்சுமணன், தமிழர் கழக மாநில பொதுச்செயலாளர் சரவணன், காமராஜ் மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வணிகர்கள்
தொழிலதிபர் தண்டுபத்து ஜெயராமன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் சத்தியசீலன், துணை தலைவர் பாலமுருகன், பால்வண்ணன், ஆசிரியர் செல்வின், முருகன், சுப்பிரமணியன், சமத்துவ மக்கள் கழக ஒன்றிய செயலாளர் சசிகுமார், வர்த்தக அணி பொன்ராஜ், துணை செயலாளர் சக்திகுமார், ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ், தளவாய்புரம் கிளை செயலாளர் காமராஜ் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர்.
ஆதித்தனார் கல்வி நிறுவனம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மேலாளர் வெங்கட் ராமராஜன், செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ், ஆதித்தனார் கல்லூரி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு தலைவர் சேவியர் பெஸ்கி, செயலாளர் கணேசன் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இனிப்பு வழங்கப்பட்டது
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவையொட்டி திரளான பொதுமக்களும் மணிமண்டபத்துக்கு வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. விழாவையொட்டி மணிமண்டபம் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலித்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைவரும் முக கவசம் அணிந்து, மணிமண்டப நுழைவுவாயிலில் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story