வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிமுகாம்


வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிமுகாம்
x
தினத்தந்தி 24 Sept 2021 9:53 PM IST (Updated: 24 Sept 2021 9:53 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சிமுகாம் நடைபெற்றது.

தொண்டி, 
திருவாடானை யூனியன் பழங்குளம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 9&ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.தேர்தல் நடத்தும் அலுவலரான ஆணையாளர் பாண்டி தலைமை வகித்தார். இதில் தேர்தல் நடைமுறைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், மண்டல தேர்தல் அலுவலர் ஜெயமுருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் 25&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தேர்தல் உதவியாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Next Story