திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடந்தது. இதில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவான் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், விபத்துகளை தடுப்பதற்கு அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும். விபத்து இல்லாத மாவட்டமாக திண்டுக்கல் மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மேலும் குற்றங்களை தடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம். எனவே குற்ற சம்பவங்கள், சமூக விரோத செயல்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அதில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரலாதன், வடக்கு இன்ஸ்பெக்டர் உலகநாதன், மேற்கு இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்&இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, பனையராஜா, மாணவ&மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story