ரவுடிகள் உள்பட 339 பேர் போலீசாரிடம் சிக்கினர்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் ரவுடிகள் உள்பட 339 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் ரவுடிகள் உள்பட 339 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
வாகன சோதனை
திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ரவுடிகளை கைது செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சோதனை சாவடிகள், முக்கிய பகுதிகள் என மொத்தம் 100&க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
இதுதவிர திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்பட முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகள், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் தோட்டத்து வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் போலீசாரிடம் சிக்கினர்.
339 பேர் சிக்கினர்
இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 44 ரவுடிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 6 பேர் உள்பட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் என மொத்தம் 339 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் ஆர்.டி.ஓ. முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் ஓராண்டு காலத்துக்கு எந்த குற்ற வழக்குகளில் ஈடுபட மாட்டோம் என்று உறுதிமொழி எழுதி கொடுத்தனர்.
இதற்கிடையே வாகன சோதனையின் போது ஹெல்மெட் அணியாதது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது, அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் உள்பட சாலை விதிகளை மீறிய 1,394 பேர் சிக்கினர். அதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story