விவசாயிகளுக்கு பயிற்சி
விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கருமல் கிராமத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயிர் திட்ட அடிப்படையிலான செயல்விளக்க தொழில்நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியை முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் கேசவ ராமன் தொடங்கி வைத்து நல்விதை தேர்வு, நல்ல மகசூலுக்கு அடிப்படையாகும் எனக்கூறினார். பின்னர் பேசிய தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட தொழில்நுட்ப ஆலோசகர் ஸ்ரீதர் விதை நேர்த்தி செய்வதன் அவசியம் பற்றி கூறினார். மேலும் விவசாயத்தில் உயிர் உரங்கள் மற்றும் பூஞ்சான கெல்வின் பங்கு பற்றி தெரிவித்தார். அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக்கொண்டு எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பான செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. முன்னதாக கருமல் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. பயிற்சியில் கருமல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 50&க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பயிற்சியின்போது வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம், துணை வேளாண்மை அலுவலர்கள் ஞானவீரன், தனதுரை, உதவி வேளாண்மை அலுவலர் ஜெய்கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்
Related Tags :
Next Story