திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனை ரூ 3 லட்சம் பறிமுதல்


திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனை ரூ 3 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 24 Sep 2021 5:17 PM GMT (Updated: 2021-09-24T22:47:18+05:30)

திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை பகுதியில் பறக்கும்படையினர் வாகன சோதனை ரூ 3 லட்சம் பறிமுதல்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டை புறவழிச்சாலையில் திருக்கோயிலூர் சிறப்பு தாசில்தார் கண்ணன் தலைமையிலான பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உளுந்தூர்பேட்டையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் உளுந்தூர்பேட்டை குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த வியாபாரி ராஜூ என்பவர் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை திருக்கோவிலுர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யூப்பிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர் கோட்டையில் உளுந்தூர்பேட்டை தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாண்டி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது அதில் புதுக்கோட்டையை சேர்ந்த முகமது சல்மான் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணம் வைத்திருந்தார். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக முகமது சல்மானிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story